ಕರಸ್ಥಲವೆಂಬ ದಿವ್ಯ ಭೂಮಿಯಲ್ಲಿ
ಮಹಾಘನಲಿಂಗ ನಿಕ್ಷೇಪವಾಗಿದೆ!
ಈ ದಿವ್ಯ ನಿಕ್ಷೇಪವ ಸಾಧಿಸುವಡೆ
ಅಂಜನಸಿದ್ಧಿಯಿಲ್ಲದೆ ಸಾಧಿಸಬಾರದು.
ಲಿಪಿಯಿಲ್ಲದೆ ತೆಗೆವಡಸದಳ.
ಆ ಲಿಪಿಯ ವ್ರಯವ ಷಟ್ತತ್ವದ ಮೇಲೆ ನಿಶ್ಚಯಿಸಿ.
ಆ ನಿಶ್ಚಯದೊಳಗೆ ಈ ನಿಕ್ಷೇಪದ ಕರ್ತೃವಿನ ಹೆಸರೋದಿತ್ತು.
ತಿಳಿಯಲೋದುವನ್ನಬರ ಆತ
ನಮ್ಮ ಹೆತ್ತಯ್ಯನೆಂಬ ಹೆಸರೋದಿತ್ತು.
ಆ ಓದಿಕೆಯ ಕಡೆಯಕ್ಕರದೊಳಗೆ ಅಂಜನಸಿದ್ಧಿ ಹೇಳಿತ್ತು.
ಅದಾವ ಪರಿಕ್ರಮದ ಅಂಜನವೆಂದಡೆ
ಅದೆಮ್ಮ ಹೆತ್ತಯ್ಯ ಜಗದ್ವಿಲಾಸ ತದರ್ಥವಾಗಿ
ಆ ತನ್ನ ಮೂಲಶಕ್ತಿ ಸಂಭೂತವಾದುದು.
ಅಲ್ಲಿ ಹುಟ್ಟಿದ ದಿವ್ಯ ಚಿತ್ಕಳೆಯಿಂದೊಗೆದ ದಿವ್ಯಭಸಿತವೆಂದಿತ್ತು.
ಆ ದಿವ್ಯ ಭಸಿತವೆಂಬ ದಿವ್ಯಾಂಜನವ ತಳೆದುಕೊಂಡು
ಅತಿ ವಿಶ್ವಾಸದಿಂದ ನಾನೆನ್ನ ಹಣೆಯೆಂಬ ಕಣ್ಣಿಂಗೆಚ್ಚಿ
ಸರ್ವಾಂಗವ ತೀವಲೊಡನೆ
ಕರಸ್ಥಲದೊಳಗಣ ನಿಕ್ಷೇಪ ಕಣ್ದೆರವಾಯಿತ್ತು.
ಆ ಕಣ್ದೆರವಾದ ನಿಕ್ಷೇಪವ ಮುಟ್ಟಹೋದಡೆ
ಅಲ್ಲಿ ನಮ್ಮ ಹೆತ್ತಯ್ಯನ ಹೊಳಹ
ಕಂಡು ತಳವೆಳಗಾದೆ ಕಾಣಾ!
ರಾಮನಾಥ.
Tamil Translationகரத்தல மெனும் தெய்வீக பூமியில்,
மேன்மைசால் லிங்கம் புதையலாயுளது,
இத்தெய்வீகப் புதையலைப்பெற,
அஞ்சனசித்தியின்றி சாதிக்கவியலாது.
குரு எழுத்தின்றி பற்றவியலாது.
அவ்வெழுத்தின் தூய்மையை,
ஆறு தத்துவங்களிலே உறுதிசெய்ய,
அவ்வுறுதியிலே அப்புதையலின்
உடையனின் பெயர் ஓதப்பட,
உணரவேண்டுமென்போர்க்கு, அவன்
நம்மைப் பெற்றவனெனும் பெயர் ஓதப்பட,
ஓதுவதின் கடையெழுத்திலே அஞ்சனசித்தி கூறப்பட,
அது எத்தகையதுய்க்கத்தக்க அஞ்சனமெனின்,
அதில் எம்மைப் பெற்றவனின் முகவரி தோன்றிட,
அத்தகைய தன்மூலசக்தி தோன்றியது.
தோன்றிய மேதகு “சித்களை”யிலிருந்து
தோன்றியது, தெய்வீக திருநீறு எனப்பட்டது.
அந்த தெய்வீக திருநீறு எனும் தெய்வீக
அஞ்சனத்தை அணிந்துகொண்டு மிகுந்த
நம்பிக்கையுடன் நான்என் நெற்றியெனும்
கண்ணிற்கு இட்டுக் கொண்டு,
உடல்முழுவதும் நிறைத்துக் கொண்டதும்,
கரத்தலத்திலுள்ள புதையல் கண்திறந்தது.
கண்திறந்த புதையலை இமைக்காது நோக்குழி
அங்கு பரம்பொருளின் பேரொளியைக் கண்டு
வியந்தேன், காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai