ಖಂಡಿತವಿಲ್ಲದ ಅಖಂಡಿತ ನೀನೆ.
ನಿಮ್ಮ ಕಂಡವರುಂಟೆ? ಹೇಳಯ್ಯ.
ಕಂಡೆನೆಂಬವರೆಲ್ಲ ಬಂಜೆಯ ಮಕ್ಕಳು
ನೀ ನಿಂದ ಹೆಜ್ಜೆಯ ಕೆಳಗೆ
ಒಂದು ಬಿಂದು ಹುಟ್ಟಿ ಬೆಳಗುವ ಛಂದವ ಕಂಡು
ಕಣ್ದೆರೆದೆ ಕಾಣಾ! ರಾಮನಾಥ.
Tamil Translationநீயே விள்ளவியலாத முழுமையானவன்,
உம்மைக்கண்டவர் உண்டோ? கூறுவாய்,
கண்டேன் என்போரெலாம் மலடியின் மக்கள்,
நீ நின்ற அடியின் கீழ்
ஒரு பிந்துதோன்றி விளங்கும் அழகைக்கண்டு
கண்திறந்தேன், காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai