Tamil Translationபணிமகள், பரத்தை, மருந்து, புலால், கள், பங்கி, புகை
வேறு தெய்வம், சிவநெறியற்றோருடன் தொடர்பு,
இவையுள்ளவரை அவன் பக்தனல்ல, ஜங்கமனல்ல,
அவ்விருவரின் தொடர்பு எங்ஙனமெனின்
பெண்பன்றி மலத்தைத் தின்று,
அவை ஒன்றின் முகத்தை ஒன்று
முகர்ந்ததனையதாம் காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai