Tamil Translationபொருளுளது என செருக்குடன் செய்வோன்பக்தி,
விலைமகளுடன் கூடி தூத்தாரி இசைப்பதனையதாம்,
உடல், மனம், பொருளில் வஞ்சனையுள்ள
பற்றுளோனின் வீட்டின் உணவு,
நாயின் வாய் எலும்பை மற்றொரு நாய்
தின்பதனையது, காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai