Tamil Translationமலைகளெலாம் கூடி, மேருமலைக்கு ஈடாகவியலுமா?
மரங்களெலாம் கூடி கற்பகத்திற்கு ஈடாகவியலுமா?
ஈடு இல்லை காணாய்
நம்பக்தருக்கு, நரரும், சுரரும் ஈடு இல்லை காணாய்!
பரிசனவேதிக்கு கல் ஈடாகுமோ?
சஞ்சீவிக்கு மருந்து ஈடாகுமோ?
இதனால், சிவபக்தருக்கு உலகமாந்தர் ஈடுஎனின்
நரகம் தப்பாது, ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai