Tamil Translationபக்தனின் மனை என்று பக்தன் சென்றுழி,
அந்த பக்தன், பக்தனை, அடியிட்டு எதிர்கொண்டு,
வணங்கி, உடன் அழைத்து வந்து, திருநீறு
தாம்பூலமளித்து, பாதபூசை செய்வித்து,
அவர் ஏற்ற திருவமுதைப் பெற்று, மகிழ்ந்து,
ஆடுவதுதான் பக்தியாம். இவ்விதமின்றி,
செருக்குற்றுப் பின்னடைந்து,
ஆணவத்துடனிருப்பவனின் வீட்டிற்கு
இலிங்கநெறியினர் செல்லார், காணாய், ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai