Tamil Translationஈசனே, உம்மை வழிபட்டபின்பு,
வேற்று தெய்வங்களைப் பொறுத்தலாகுமோ?
பொறுத்தலின்றி, வேற்று தெய்வத்தை விரும்பின்,
அவன் நம் ஈசனுக்குப் புறமாம்
குற்றமற்ற பக்தர், அவனை நற்குலமென்று
பெண்ணை அளித்துக் கூடி உண்டால்
படையலை நாய் தொட்டதனையதாம் காணாய் ராமநாதனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai