Hindi Translationसद्गुरु स्वामि शिष्य को अनुग्रह करने में
उस शिष्य के मस्तकपर अपना हस्त रखे तो
लोहे पर परुष गिरा जैसा हुआ था अय्या।
माने श्री विभूति को माथे पर धारण करें तो
मुक्ति राज्य के प्रभुत्व का पट्टाधिकार किया जैसा हुआ था अय्या।
सद्योजात,वामदेव,अघोर,तत्पुरुष,ईशान,जैसे
पंचकलश का अभिषेक कराने से,
शिव का करुणामृत हल्की वर्षा बरसने जैसी हुई थी अय्या।
इकट्टे शिवगणों के बीच में
महालिंग को करतलामलक कर शिष्य के करस्थल में रखकर,
अंग में प्रतिष्ठा कर, प्रणव पंचाक्षरी उपदेश
कर्ण में बताकर, कंकण धारण करे तो,
काया ही कैलास हुई थी;
प्राण ही पंचब्रम्हमय लिंग हुआ था।
इस तरह आगे दिखाकर पिछला छुड़ाये
श्री गुरु के सानिध्य से मैं जिंदा हूँ अय्या
चेन्नमल्लिकार्जुना।
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஉயர்மெய்குரு சீடனுக்கு அருளிய பொழுது,
தம்சீடனின் தலைமீது தம் திருக்கரத்தை இட்டபொழுது,
இரும்பின் மீது பரிசவேதி பட்டதனைய ஆயிற்று ஐயனே,
இசைந்த திருநீற்றினை நெற்றியிலே இட்டபொழுது,
முக்தி உலகின் தலைமைக்குப்
பட்டங்கட்டியதனைய ஆயிற்று ஐயனே,
ஸத்யோஜாத வாமதேவ அகோர தத்புருஷ ஈசானனெனும்
ஐந்து கலசங்களில் திருமுழுக்காட்டிய பொழுது,
சிவனின் அருள் அமுதமெனும் ஊற்று பொழிந்ததனைய
ஆயிற்று ஐயனே. நிறைந்த சிவகணங்களின் நடுவிலே,
மகாலிங்கத்தை அங்கை நெல்லிக்கனி போல சீடனின்,
கரத்திலிட்டு, உடலிலே நிலை நிறுத்தி, ஒம்கார ஐந்தெழுத்து
உபதேசத்தைக் காதிலே உரைத்து, கங்கணத்தைக்
கட்டிய பொழுது உடலே கைலாசமாயிற்று. உயிரே
ஐந்து பிரம்மங்களால் நிறைந்த இலிங்கமாயிற்று,
முன்னே நெறியைக் காட்டிப் பின்னே பிறவியகற்றிய
உயர்குருவின் அருகாமையால் நான் உய்ந்தேனையனே
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai