Hindi Translationअय्या, परात्पर सत्य सदाचार
गुरु लिंग जंगम के श्रीचरण को
पहले कहे अच्च प्रसादी जैसे
निर्वंच कत्व से गुरु लिंग जंगम को
अर्थप्राणाभिमान समर्पित कर,
एक बार अष्टविधार्चन षोडशोपचार से
अर्चना कर, उस चरणोदक प्रसाद को
अपने सर्वांग में स्थित इष्टमहालिंग देव को
देकर लेने जैसे सामने रखकर
जंगम पादोदक प्रसाद लेने से
आचरण नीति देखो।
उसके बाद एकबार संबंध रखकर
आचरण की रीति कैसे कहें तो :-
अय्या, तेरे षट्स्थान में रहे इष्टमहालिंगदेव के
त्रिविध स्थान में ॐबसवण्णा, चेन्नबसवण्ण, अल्लमप्रभु जैसे
त्रिविध नामस्वरूप षोडशाक्षारी ही
षोडश वर्ण होकर स्थिर हुए हैं देखो।
ऐसे षोड्श कळा स्वरूप
चिद्घन महालिंग देव के
निरंजन जंगम के रूप में
सगुण निर्गुण पूजाकर
जंगम चरण लगने से आये
गुरुपादोदक ही सही,
अगर वह न मिले तो
लिंग आज्ञा से आये
परिणामोदक हो तो भी सही,
एक भांडे में सूक्ष्म से रचाकर
उस उदक में हस्तोदक,
मंत्रोदक, भस्मोदक रचाकर,
बाद में अनादि मूल प्रणवप्रसाद प्रणव में
अखंड ज्योति प्रणव, अखंड महा ज्योति
प्रणव लिखकर शुद्धादिपूर्ण भक्ति से
महा चिद्धन तीर्थ समझकर
पंचाक्षर षडक्षर मंत्र ध्यान से
(एकटक)अनिमिष दृष्टि से निरीक्षा कर,
तीन बार प्रदक्षिणा कर,
उस चिद्घन तीर्थ को द्वादश दलकमल के बीच में स्थित
इष्ट महालिंग जंगम को
अष्टविध मंत्र सकीलों से
आचारादि शून्यांत हुए अष्टविधलिंग ध्यान से
अष्टविध बिंदुओं को समर्पित करने से
अष्टविधोदक हो जाएगा।
उस इष्ट महालिंग जंगम को
अष्टादशमंत्र स्मरण से
समाप्त होने से नवमोदक हो जायगा।
बचे उदक को त्रिविध प्रणवध्यान से
पूरा करने से
दश विधोदक कहलायेगा।
ऐसे महाज्ञान लिंग जंगम स्वरूप पादतीर्थ
पूर्ण होने के बाद थाली लोटे में नैवेद्य कर ने हो तो
गृह में रहे क्रिया शक्तियों को धारण करे तो
खुद किये पादोदक प्रसाद देना है।
सहज लिंग भक्त हो तो
मुख मार्जन करवाकर खुद धरित
विभूति धारण करवाकर
शिव शिवा हर हर बसवलिंग कहे बोधकर नैवेद्य करवालेना है।
बाद में खुद स्थलीय हो तो संबंध रखे,
परस्थल हो तो चिद्धन इष्टलिंग जंगम को
वामकरस्थल में रखकर
दक्षिणहस्थ में गुरुलिंग जंगम का सूत्र पकडकर
आगे क्रिया भसित लेपकर
मूल प्रणव प्रसाद प्रणव में
गोलक प्रणव अखंड गोलक प्रणव
अखंड महा गोलक प्रणव,
ज्योति प्रणव ध्यान से
द्वादश मणिध्यान कर प्रदक्षिणाकर,
मूलमूर्ति लिंगजंगम के मस्तकपर स्पर्शकर,
लोटे को तीनबार स्पर्शकर
पदार्थ का पूर्वाश्रय मिठाकर
शुद्ध प्रसाद समझकर,
उस इष्ट महालिं गजंगम को
अष्टादश मंत्रस्मरण से तीनबार रूप समर्पितकर, दो बार रूप दिखाकर,
चिर प्राणलिंग मंत्र जिह्वा में रखकर छठीबार भोज्य रखकर
उस इष्ट महालिंग मंत्र ध्यान से समर्पितकर,
षड्विध लिंग को लोलुपतासे संतृप्त होकर आचरण करनेवाला ही
गुरुभक्त हुआ निच्चप्रसादी कहूँगी देखा
चेन्नमल्लिकार्जुना |
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐயனே கடவுள், உண்மை, நன்னெறி, குரு, இலிங்க
ஜங்கமரின் திருவடிகளை முதலிலே கூறிய முறையிலே
வஞ்சனையின்றி, குரு, இலிங்க ஜங்கமருக்கு
பொருள், உயிர், மதிப்பினை அர்ப்பித்து,
ஒருமுறை எட்டு வித அர்ச்சனை, பதினாறு உபசாரங்களால்
அர்ச்சனை செய்து, அந்தத் திருவடித் திருநீர் திருவமுதை
தன் உடல் முழுவதும் இருத்தி, இஷ்டமகாலிங்கதேவருக்கு
அளித்துப் பெறுவதை எதிரிலிட்டு, ஜங்கமத் திருவடித் திருநீர் திருவமுதை
ஏற்கும் முறையினைக் காணாய்.
பிறகு ஒருமுறை பொருத்தமுறக் கடைப்பிடிக்கும் முறை எது எனின்,
ஐயனே, உன் ஆறாவது நிலையிலே நிலைத்த இஷ்டலிங்கதேவரின்
மூன்று வித நிலையில் ஓம்பசவண்ணா, சன்னபசவண்ணா, அல்லமபிரபுஎனும்
மூன்று வித நாமஸ்வரூபமான பதினாறு எழுத்துக்களே
பதினாறு உருவாக நிலைத்திருப்பர் காணாய்,
இவ்விதம் பதினாறு கலாஸ்வரூபமாக சிவன் மகாலிங்கதேவரின்
தூய்மையான ஜங்கம முறையிலே சகுண, நிர்குண பூசைகளைச் செய்து,
ஜங்கமத்திருவடியைத் தீண்டி வந்த குருபாத தீர்த்தமும் சரியே
அது இல்லையெனின்
இலிங்கத்திலிருந்து இறங்கி வந்த பயன் தரும் தீர்த்தமாகவுமிருக்கலாம்
ஒருகலத்திலே கவனமாகச் செய்து நிரப்பிய நீரிலே,
கைநீர், மந்திரநீர், திருநீற்றுத் திருநீர் சேர்த்துப்
பிறகு அனாதி, மூல பிரணவ பிரசாத பிரணவத்தினுள்ளே
முழுசோதி பிரணவம்| முழு மகாசோதி பிரணவத்தை எழுதி
சிரத்தையுடனும், முழுபக்தியுடனும் மகாசிவனின் தீர்த்தம் என்றெண்ணி
ஐந்தெழுத்து, ஆறு எழுத்து மந்திர தியானத்திலே இமையாது நோக்கி,
மூன்று முறை பிரதட்சணம் செய்து
அந்த சிவனின் தீர்த்தத்தை பன்னிரெண்டு இதழ்த்
தாமரையிலே நடுவிலே நிலை நிறுத்தி
இஷ்டமகாலிங்க ஜங்கமருக்கு எண் வித மந்திரங்களுடன்
ஆசாரம் போன்ற முழுமையான நிறைந்த எட்டுவித இலிங்க தியானத்துடன்
எட்டு வித பிந்துக்களை அர்ப்பித்தால் அது எண்வித தீர்த்தம் ஆகும்.
அந்த இஷ்டமகாஜங்கமருக்கு பதினெட்டு மந்திரம் கூறின்,
முடிந்து, அது ஒன்பது வகைத்தீர்த்தமாகும் ஐயனே,
மிகுந்தநீரை, மூன்றுவித பிரணவ தியானத்தினால்
முடித்தால் அது பத்துவகைத் தீர்த்தமாகும் ஐயனே,
இவ்விதம் மகாஞானலிங்க ஜங்கமஸ்வரூபபாத தீர்த்தம் நிறைவுற்றபின்,
தட்டு, கிண்ணங்களில் இடவேண்டுமெனின்
வீட்டிலே பணிபுரிவோருக்கு விருப்பமிருப்பின்,
தான் கொண்ட பாத தீர்த்தப் பிரசாதத்தையளிக்க வேண்டும்.
இயல்பான இலிங்க பக்தர் எனின்,
முகத்தைக் கழுவி, தான் பூசிய திருநீற்றைப்பூசி,
‘சிவசிவா’ அரஅரா, பசவலிங்கா என்று அறிவுறுத்தி
அளிக்கவேண்டும் ஐயனே.
பிறகு, தன் இருப்பிடம் எனின் பாந்தமுறவும்
வேற்றிடமாக இருப்பின் சிவ, இஷ்டமகாலிங்க ஜங்கமறை
இடக்கைத் தலத்திலே மூர்த்தி செய்து கொண்டு,
வலக்கையினால் குரு, லிங்க, ஜங்கம முறைப்படி வந்த திருநீற்றைப் பூசி,
மூல பிரணவ பிரசாத பிரணவத்திலே
கோள பிரணவ அகண்ட கோள பிரணவ அகண்ட மகாகோள பிரணவ
சோதி பிரணவ தியானத்தினால் பன்னிரெண்டாம் மணியைத் தியானித்துப்
பிரதட்சிணம் செய்து, மூலமூர்த்தி, இலிங்க ஜங்கம தலையைத் தீண்டி,
தட்டினை மூன்று முறை தீண்டி, அதன் பழைய நிலை அகன்ற
தூயபிரசாதம் என்றெண்ணி, அந்த இஷ்டமகாலிங்க ஜங்கமருக்கு
பதினெட்டு மந்திரங்களால் மூன்று முறை உருவினை அர்ப்பித்து,
இருமுறை உருவினைக்காட்டி, சிர பிராண லிங்க மந்திரத்தை
நாவிலிருந்து ஆறாம் முறையாகப் படைத்து,
அந்த இஷ்ட மகாலிங்க மந்திரதியானத்தினால் அர்ப்பித்து,
ஆறுவிதமாக இலிங்கத்தை விரும்பி நிறைந்து கடைப்பிடிக்கும் அவனே
குருபக்தனான, நிலைத்த பிரசாதி என்பேன் காணாய்
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai