Hindi Translationअय्या, सदाचार सद्भक्ति सत्क्रिया सम्यकज्ञान सद्वर्तना,
सगुण निर्गुण निजगुण सच्चरित्र सद्भाव
अक्रोध सत्यवचन शमा दमा भवि भक्त भेद
सत्पात्र द्रव्यार्पण गौरव बुद्धि लिंगलीना जंगमानुभाव
दशविध पादोदक एकादशप्रसाद षोडश भक्ति निर्वाह,
त्रिविध षड्विध नवविध लिंगार्चन,
त्रिविध षड्विध नवविध जप,
त्रिविध षड्विध नवविध लिंगार्पण |
चिद्विभूति, स्नान, धूलधारण, सर्वांग में चिदृद्राक्षि धारण ;
खुदकर ना सत्य कायक,
खुद माँगना सद्भक्ति भिक्षा, खुद ले देने का भेद,
खुद आचरण करनेवाली सत्य चालबोल, खुद स्थित निर्वाण पद।
ऐसे बत्तीस स्थान दोषों को सद्गुरु मुँह से जानकर
बसवादि समस्त गण सब प्रमथ
निराभारि वीरशैव सन्मार्ग पर चलकर आचरण किये देखो।
ऐसे प्रमथ गणों से आचरित
सत्य सन्मार्ग न जाननेवाले मूढ अधमों को कैसे
शिवशक्ति शिवभक्त शिवजंगम कहूँगी
चेन्नमल्लिकार्जुना ?
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐயனே, நன்னெறி, நற்பக்தி, நற்செயல், நல்ஞானம்,
சகுண, நிர்குண, நிஜகுண நன்னடத்தை, நல்லெண்ணம்,
அமைதி, வாய்மை, பொறுமை, பவி-பக்தர்வேறுபாடு,
பாத்திரமறிந்து ஈதல், பெருந்தன்மை, இலிங்கத்தில் இணைதல்,
ஜங்கமரை உணர்தல், பத்து வகைத் திருவடித் திருநீர்; பதினொரு
வகைத் திருவமுது, பதினாறுவகை பக்தி,
மூவகை, அறுவகை, ஒன்பதுவகை இலிங்கார்ச்சனை,
மூவகை, அறுவகை, ஒன்பதுவகை செபம்,
மூவகை, அறுவகை, ஒன்பதுவகை இலிங்கார்ப்பணம்,
நல்ல திருநீற்றிலே நீராடி, திருநீற்றைப்பூசி, உடலெங்கும்
உருத்திராக்கமணிந்து, தான் செயும் உண்மை உழைப்பு,
தான் வேண்டும் நல்லபக்தி எனும் பிச்சை, தான் அளித்து, ஏற்கும் பேதம்
தான் கடைப்பிடிக்கும் உண்மை நடை,
தான் நிற்கும் நிர்வாண பதம் எனும் முப்பத்தி இரண்டு
நிலைக் களன்களை, உயர் குருவின் மூலம் உணர்ந்த
பசவர் போன்ற எல்லா கணங்களும்,
எளிய வீரசைவ நன்னெறியைக் கடைப்பிடித்தனர் காணாய்,
இவ்விதம் சான்றோர் கடைப்பிடித்த உண்மை நன்னெறியை,
அறியவியலாத மூடர்களை எங்ஙனம்
சிவசக்தி, சிவபக்தன், சிவஜங்கமரென்று
உரைப்பேன் ஐயனே, சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai