Hindi Translationअय्या, सर्वमूल अहंकार से
कुलभ्रमा, छलभ्रमा, जातिभ्रमा,
नाम वर्ण आश्रम मत, शास्त्र भ्रमा,
तर्क भ्रमा, राज्य भ्रमा, धनधान्य पुत्रमित्र भ्रमा,
ऐश्वर्य त्याग भोग योग भ्रमा,
काय करण विषय भ्रमा,
वायु-मन-भाव-जीव मोह भ्रमा,
ना हं, को हं, सो हं, मायाभ्रमा आदि
बत्तीस पाशाभ्रमित होकर तडपते वेषधारियों को
शिवशक्ति शिवभक्ति शिवप्रसाद शिवशरण शिवैक्य
शिवजंगम कैसे कह सकने से मेरा मन लज्जा से
तुम्हारे चरणाभिमुख हुआ चेन्नमल्लिकार्जुना |
Translated by: Eswara Sharma M and Govindarao B N
English TranslationTranslated by: Dr. Sarojini Shintri
Tamil Translationஐயனே அனைத்து மூலச் செருக்கினைப் பற்றி,
குலமயக்கம், பிடிவாதமயக்கம், சாதிமயக்கம்,
நாம, வருணாச்சிரம, மத, சாத்திர மயக்கம், தருக்க மயக்கம்,
நாடாளும் மயக்கம், தன, தான்ய புத்ர, மித்ர மயக்கம்,
செல்வம், தியாகம், போக, யோக மயக்கம்,
உடல், புலன்கள் மயக்கம் வாயு, மன, எண்ண,
வாழ்வு, ஆசைமயக்கம் ‘நாஹம்’ கோஹம்
சோஹம் மாயா மயக்கம் போன்ற முப்பத்தி இரண்டு
பாச மயக்கமுற்றுத் துன்புறும் வேடதாரிகளைக் கண்டு,
சிவபக்தி, சிவசக்தி, சிவபிரசாதி, சிவனடியார்,
சிவஐக்கியன், சிவஜங்கமரென்று கூறவியலாது,
என் மனம் நாணி, உம் திருவடிக்கு அருகிலாயிற்று ஐயனே
சன்னமல்லிகார்ச்சுனனே.
Translated by: Smt. Kalyani Venkataraman, Chennai